நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
 

 

சூரியன்   சந்திரன்  செவ்வாய்   புதன குர சுக்கிரன   சனீஸ்வரன ராகு   கேது                                               நவகிரக தோஷ நிவர்த்திஸ்தலம்

 

 

நவகிரக தோஷ நிவர்த்திஸ்தலம்

நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் " திருமங்கலக்குடி". இத் தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலாவராக "பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் " அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என "பஞ்ச மங்கல ஷேத்ரமாக" வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது."மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே"எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர். ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்த, முக்காலமும் அறிந்த "காலவ முனிவரிடம்" ஒரு துறவி வந்து தனது வருங்காலம் பற்றி ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

 
 

சூரியனார்

சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்" >>>

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான " சூரியனார் கோவில் ". மேற்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக் கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக " சூரிய தேவன் " இடப் புறம் உஷா தேவியுடனும், வலப் புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். ...கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

திங்களூர்

<<< முக்கண்ணனின், இடது கண்ணான " சந்திர பகவான் " அருளும் "திங்களூர்"

கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான " அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ திடத்துடன் இருப்பார். இவரது நீச்சம் மன நோய் தரும். சந்திரனது ....கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

செவ்வாய்

பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்"  >>>

நவக்கிரகங்களில் மூன்றாவதாய் குறிப்பிடப்படும் செவ்வாய் எனும் " அங்காரகன் " ஆட்சி புரியும் தலமாக விளங்குவது " வைத்தீஸ்வரன் கோவில் ". கும்பகோணத்தை அடுத்த மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து தோன்றினார் அங்காரகன். அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன், வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வழிபட சொன்னார். அங்காரகனும் அவ்வாறே செய்ய அவரது செங்குஷ்டம் நீங்கியது. இறைவனிடம் தன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும், சற்புத்திர பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவ பெருமானும் " செவ்வாய் கிழமைகள் உனை துதிப்போர் ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

புதன்

கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள "திருவெண்காடு"  >>>

 

கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

 

குரு

புத்திர மற்றும் பொருள் காரகனான "குரு பகவான்" அருளும் " ஆலங்குடி"  >>>
 

நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு. கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத்தலம். கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
 

சுக்கிரன்

                                                   <<<  சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் "சுக்கிரன்" குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"

தேவர்களின் குருவாக " ஆலங்குடி வியாழ பகவான் " விளங்குவது போல, அசுரர்களின் குருவாக விளங்குபவர் " சுக்கிரன் ". இவர் ஒரு நீர்க் கிரகம், பெண் கிரகம். வெண்ணிறம் கொண்டுள்ளதால் " வெள்ளி " எனவும் அழைக்கப்படுகிறார். சுக்கிரனுக்குரிய தலமான " கஞ்சனூர் " கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி " கற்பகாம்பிகை ". கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
 

சனி

<<<மாங்கல்ய காரகரான, புத்திர பாக்கியம் தந்திடும் சனி பகவான் அருளும் "திருநள்ளாறு"

நவக்கிரகங்களில் " ஈஸ்வர " பட்டம் பெற்ற
ஒரே கிரகம் சனி பகவான். இவர் ஆயுள் காரகன். சனியின் பலம் கொண்டுதான் ஒருவரது ஆயுள் அமைகிறது. " சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை " என்றனர் ஆன்றோர். பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளிப்பவர் இவர். ராகு காலம், எம கண்டம் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நேரங்கள். ஒரு கால் ஊனமான இவர், மாங்கல்ய காரகராவார். புத்திர பாக்கியம் கொடுப்பவர். மனிதரது வாழ்வில் ஏழரைச் சனி மூன்று முறை வரலாம். முதலில் வருவது " மங்கு சனி " இரண்டாவதாய் வருவது " பொங்கு சனி". மூன்றாவதாய் வருவது " மாரகச் சனி". பாலைவனம், மயான பூமி, பாழடைந்த கட்டிடங்கள், புதையுண்ட இடங்கள் இவை யாவும் சனி வாசம் செய்யும் இடங்களே. மனித உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், ...கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

 

 

ராகு

சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள " திருநாகேஸ்வரம்" >>>

கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது " ராகு,
கேது, நாக தோஷ பரிகார " தலமான " திருநாகேஸ்வரம்". ஒரு சமயம் சுசீல முனிவரால் சாபம் பெற்ற ராகு பகவான், தனது சாபம் நீங்க, சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை காரோண்யத்தையும் வழிபட்டு, பின்னர் இத் தலம் வந்து ஈசனின் அருளால் சாபம் நீங்க பெற்றார். நந்தி தேவரும், நான்முகனும், சூரியனும், வசிஷ்டரும், இந்திரனும் வழிபட்ட திருத் தலம் இது. நாக ராஜன், தான் வழிபட வேண்டி இறைவனை பிரதிஷ்டை செய்ததாலும், ராகு பகவான் சாபம் நீங்க பெற்றதாலும், இத் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. நாக ராஜன், தன் இரு தேவியருடன், கோவிலின் தென் மேற்கு ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

கேது

<<<       ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "                 

சீர்காழியில் இருந்து
பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது " கேது பகவான் " அருளாசி புரியும் கேது தோஷ நிவர்த்தி தலமான " கீழப் பெரும் பள்ளம் ". கொள்ளு தானியப் பிரியனான இவன் அசுரர்களில் வலியவன். மனிதற்கு ஏற்படும் தரித்திரம், வியாதிகள், பீடைகள் இவற்றிற்கு காரணகர்த்தா. கதம்ப மலர்ப் பிரியோன் இவன். வைடூர்ய ஆபர்ணன். கஸ்தூரியை சந்தனமாக கொள்பவன். மனிதரது பீடைகள் நீங்க வேண்டுமெனில் கேது பகவானின் அருளை பரிபூரணமாக பெற வெண்டும. தனி சந்நதி கொண்டு கேது பகவான் விளங்கும் இத் திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. கேது பகவான் மோட்சம் தருபவர். திடீர் தன பிராப்தி, யோகம், புதையல் போன்றவை இவனால் ஏற்படுபவையே. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு நீர் ஊற்றி அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்தால் ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1