நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
 
சூரியன்   சந்திரன்  செவ்வாய்   புதன குர சுக்கிரன   சனீஸ்வரன ராகு   கேது                                               நவகிரக தோஷ நிவர்த்திஸ்தலம்
குருவருள் அருளும் ஆலங்குடி

நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு.
 
 

தல அமைவிடமும் , சிறப்பும்


கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274. அவ்ற்றில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது 127. இவற்றில் 98 வது தலமாக விளங்குவது இந்த தட்சிணாமூர்த்தியின் விஷேஷ தலமாக விளங்கும் " ஆலங்குடி ". இத் தல மூலவர் சுயம்பு லிங்கம். ஆபத்சகாயர், ஆரண்யேசுவரர், காசியாரண்யேசுவரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இறைவி " ஏலவார்குழலியம்மை ". தல விஷேஷ மூர்த்தி குரு தட்சிணாமுர்த்தி. விசுவாமித்திரர், அகத்தியர், வீரபத்திரர் போன்றோர் வழிபட்ட திருத் தலம் இது. இத் தலம் திருநாவுக்கரசராலும், திருஞான சம்பந்தராலும் பாடப் பெற்றது, ஆதி சங்கரர் வழிபட்ட இத் தலம் பஞ்சாரண்ய தலங்களில் ஒன்று. இது விஷம் தீண்டா தலம். இத் தலத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டி யாரும் இறப்பதில்லை. காசியில் இறக்க நேர்ந்தால், காசி விஸ்வநாதர் இறப்பவரது காதில் இறக்கும் முன் " ராம நாமம் " சொல்லி முக்தியடையச் செய்வதாக ஐதீகம். அது போல், இத் தலத்தில் ஈசன் " பஞ்சாட்சிர மந்திரம் " உபதேசிப்பதாக நம்பிக்கை. பஞ்சாட்சிர மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பவர்களை பூதம், பிரேதம், பைசாச, வேதாளம் போன்றவை நெருங்குவதில்லை. எல்லா விதமான நோய்களும், துனபங்களும் அகலும் என்கிறது " காசியாரண்ய மகாத்மியம் "

 
திருத்தல சிறப்புகளும், வழிபாட்டு முறைகளும்

குரு பகவானின் அருளாசி கிடைக்க ஆலங்குடி சென்று அவரை 24 தீபங்கள் ஏற்றி அர்ச்சித்து 24 முறை வலம் வர வேண்டும். வியாழக் கிழமைகள் தோறும் விரதம் இருப்பதாலும், தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வதாலும் குரு பார்வை கிடைக்கும். பூளைச் செடி இங்கு தல விருட்சம். பூளைச் செடிகள் அதிகமாக உள்ளதால், இத் தலம் " திரு இரும்பூளை " என்றும் அழைக்கப்படுகிறது.

பழங்கால சிற்பங்கள் கொண்ட ஐந்து நிலை கோபுரத்துடன் விளங்குகிறது இத் திருத்தலம். உட் பிரகாரத்தில், சனீஸ்வரன், சுக்ரவார அம்மன், சூரியன், சுந்தர மூர்த்தி, சமயக் குரவர் நாலவர், சப்த லிங்கங்கள், சோமச் கந்தர், அகத்தியர், முருகன், லஷ்மி சந்நதிகளும் உள்ளன. ஆலயத்தின் தெற்கு பக்க ராஜ கோபுரத்தில் கலையம்சம் கொண்ட சிற்பங்கள் உள்ளன. இது குரு தலம் என்றாலும், சிவனே இங்கு தட்சிணாமூர்த்தியாய் அருள்பாலிகிறார்.

பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்கள் சிவ பெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கும் ஆனால் இங்கு சிவனே தட்சிணாமூர்த்தியாய் அருளுகிறார். திருவாரூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் முசுகந்தன் தனது மந்திரி அமுதோகருக்கு ஆலயம் கட்ட நிதி உதவி அளித்தான். ஆனால் அமுதோகரோ தனது சொந்த பணத்தை கொண்டே ஆலயத்தை கட்டி முடித்தார். மன்னவன், மந்திரியிடம் ஆலயம் கட்டிய புண்ணியத்தில் ஒரு சிறு பகுதியை தானமாக கேட்க மந்திரியோ மறுத்தார். மன்னவன் மந்திரியை சிரச் சேதம் செய்யச் சொல்ல, வாள் ஓங்குகையில் இறைவன் தோன்றி அமுதோகரை தன்னகத்தே சேர்த்து கொண்டார்.

பார்வதி தேவி, விஷ்ணு, லட்சுமி, இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்ட தலம் இது. இங்கு ஆதி சங்கரர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் சிவஞானம் அடைந்தனர். ஒரு சமயம், கஜமுகன் என்கின்ற அரக்கன் ஒருவன் தேவர்களை இம்சிக்க, இறைவனின் ஆணைப்படி இத் தல விநாயகர் அரக்கனை தண்டித்து தேவர்களை காத்தருளினார். இதனாலெயே இவர் " கலங்காமல் காத்த விநாயகர் " ஆனார்.
 
குரு பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி தனுசு, மீனம் திக்கு வடக்கு
அதி தேவதை வியாழன் ப்ரத்யதி தேவதை இந்திரன்
தலம் திருச்செந்தூர் , ஆலங்குடி வாகனம் அன்னம்
நிறம் மஞ்சள்
 
உலோகம் தங்கம்
தானியம் கடலை மலர் வெண்முல்லை
வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைகள் ரத்தினம் புஷ்பராகம்
நைவேத்யம் கடலைப் பொடி அன்னம் சமித்து அரசு

பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்கள் சிவ பெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கும்

ஆனால் இங்கு சிவனே தட்சிணாமூர்த்தியாய் அருளுகிறார்.

காசியில் இறக்க நேர்ந்தால், காசி விஸ்வநாதர் இறப்பவரது காதில் இறக்கும் முன் " ராம நாமம் "

சொல்லி முக்தியடையச் செய்வதாக ஐதீகம். அது போல், இத் தலத்தில் ஈசன் " பஞ்சாட்சிர மந்திரம்

" உபதேசிப்பதாக நம்பிக்கை. பஞ்சாட்சிர மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பவர்களை பூதம்,

பிரேதம், பைசாச, வேதாளம் போன்றவை நெருங்குவதில்லை. எல்லா விதமான நோய்களும்,

துனபங்களும் அகலும் என்கிறது " காசியாரண்ய மகாத்மியம் ".

குரு பகவானின் அருளாசி கிடைக்க ஆலங்குடி வந்து அவரை 24 தீபங்கள் ஏற்றி அர்ச்சித்து

24 முறை வலம் வர வேண்டும். வியாழக் கிழமைகள் தோறும் விரதம் இருப்பதாலும்,

தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வதாலும் குரு பார்வை

கிடைக்கும். இத் தலத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டி யாரும் இறப்பதில்லை.


 

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1