நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
 
சிவ லிங்க மகிமைகளும், சிவ பெருமானின் பெருமைகளும், வழிபாட்டு பலன்களும்
=
சிவ பெருமானது திருக்கோலங்கள்

பரமேஸ்வரனுடைய திருக்கோலங்களில் 25 மிக முக்கியமானவை. இவை மகேஸ்வர வடிவங்கள் எனப்படும். இவற்றில் 5-ஐ தேர்ந்தெடுத்து உலாத் திருமேனிகளாக்கினர் நம் முன்னோர். அவையாவன, சோமஸ்கந்தர், சந்திர சேகரர், பிரதோஷ நாதர், நடராஜர் மற்றும் பிட்சாடனர். இவற்றில், முதலானவர் பிரதோஷ நாதர். இவர் 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் பிரதோஷ தினங்களில் கோயிலுக்குள்ளேயே ரிஷப வாகனத்தில் வலம் வருபவர். இரண்டாமவர், மாதப் பிறப்பு மற்றும் விஷேஷ நாட்களில் வலம் வரும் சந்திர சேகரர். சோமஸ்கந்தர் மூன்றாமவர். இவர் கோவிலின் தென்மேற்கு மூலையில் இருப்பவர். பெரும் திருவிழாக்களில் உலா வருபவர். நான்காமவரான நடராஜர் தீர்த்த வாரி தினங்களிலும், மார்கழி திருவாதிரை நாட்களிலும் உலா வருபவர். ஐந்தாமவரான பிட்சாடனர், பிரம்மோத்சவ எட்டாம் நாளில் உலா வருபவர். இவர் சிவ பெருமானின் எளிய திருக்கோலமாவார்.

சிவலிங்கத்தின் சிறப்புகள்

சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தில் உருவமற்றும், அருவமற்றும், உரு அருவமாக காணப்படும் மூர்த்தமே சிவலிங்கம். பீடம் மற்றும் லிங்கம் என இரு பாகங்களை கொண்டது. தரையிலிருந்து லிங்கத்தை தாங்கி நிற்பது பீடம் அல்லது ஆவுடையார் எனப்படும். இது சதுர, வட்ட அல்லது அறுகோண வடிவில் அமைந்திருக்கும். லிங்கம் என்பது பீடத்திலிருந்து மேலெழுந்து காணப்படும் பகுதி. இது பிரம்ம, விஷ்ணு மற்றும் ருத்ரம் என மூன்று பாகங்களை கொண்டது. நாம் காணும் பகுதி ருத்ர பாகமாகும். மற்ற இரு பாகங்களும் பீடத்தினுள் மறைந்திருக்கும்.

லிங் + கம் = லிங்கம் = லயம் + தோற்றம். உலகின் அனைத்து சராசரங்களும் தோன்றும் இடம், தோன்றிய பின்னர் வெளிப்படும் இடம் என்பதே இதன் பொருள். லிங்கத்தின் அடிப் பாகமான பிரம்ம பாகம் நாற்கோண வடிவிலும், நடுப் பாகமான விஷ்ணு பாகம் எண் கோணமாகவும், மேற் பாகமான ருத்ர பாகம் நீண்ட உருளை வடிவிலும் காட்சியளிக்கும். லிங்கம் மும் மூர்த்திகளின் அடக்கம். பீடத்திலிருந்து நீர் விழும் பகுதி "நாளம்" எனப்படும். சிவ லிங்கங்கள் "சல" மற்றுஇம் "அசல" என இருவகைப்படும். தனே தோன்றியவை சுயம்பு லிங்கங்களாக வணங்கப்படும். நமது தேவைக்கேற்ப, தங்கம். சாதம் , களிமண், ருத்ராட்சம், தர்ப்பை, வெண்ணெய், சந்தனம், மாவுப் பொடி, வெல்லம் போன்றவற்றை கொண்டு லிங்கத்தை வடிவமைத்தும் பூஜை செய்து பல்வேறு பயன்களை பெறலாம். சாதம் உணவு தரும். களிமண் சொத்துக்களை அளிக்கும். பசுஞ்சாணி நோய்கள் தீர்க்கும். வெண்ணெய் மன மகிழ்வை அளிக்கும். ருத்ராட்சம் ஞானம் தரும். தர்ப்பை ஆன்ம விடுதலை அளிக்கும். சந்தனம் நலம் தரும். வெல்லம் பிரச்சனைகளை தீர்க்கும். மாவுப்பொடி உடல் மற்றும் மன வலிமை தரும். தங்கத்தால் லிங்கம் செய்து வழிபட செல்வங்கள் சேரும்.

ஐந்து வகை சிவாலய் திருவிழாக்கள்

சிவாலயங்களில் ஐந்து வகையான திருவிழாக்கள் நடைபெறும். அவையாவன, நித்யோத்சவம், வார உற்சவம், பட்ச உற்சவம், மாத உற்சவம் மற்றும் வருஷ உற்சவம். அனு தினமும் உச்சி வேளைகளிலும், இரவிலும் நடப்பது நித்யோச்சவம். கிழமைகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவது வார உற்சவம். பட்ச உற்சவம் என்பது சதுர்த்தி, அஷ்டமி, பிரதோஷம் முதலான திதிகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவது. மாதத்தின் முதல் நாள், பௌர்ணமி, அமாவாசை போன்ற மாதத்தில் ஒரு நாள் வருவனவற்றை அடிப்படையாக கொண்டு நடைபெறுவது மாத உற்சவம். திருவாதிரை, கார்த்திகை தீபம், மாசி மகம் போன்ற வருடத்திற்கு ஒருமுறை வருவனவற்றை அடிப்படையாக கொண்டு நடைபெறுவது வருஷ உற்சவம்.

சிவாலய வழிபாட்டு முறைகள்

பிரதோஷ கால வேளைகளில் சிவ பெருமானை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் தரிசனம் செய்வது அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும். சிவ லிங்க ரூபாமாக சிவனை வழிபடுவோர் சிவலோக பிராப்தி அடைவர். "நமசிவாய" எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி, வில்வம் கொண்டு அர்ச்சித்து சிவ வழிபாடு செய்தால் அனைத்து தீமைகளும் விலகி நன்மை பயக்கும். பிரதோஷ பூஜைகளை தொடர்ந்து செய்ய இப் பிறவி மட்டுமல்லாது முற்பிறவி பாவங்களும் தீரும். சிவாலயங்களில் செய்யபப்டும் பிரதட்சணம் அசுவமேத யாகம் செய்த பலனைத் தரும். சிவாலய புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவருக்கு பிரம்மஹத்தி தோஷங்கள் விலகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.கோவிலில் நுழைந்தவுடன், விநாயகரையும், பின்னர் நந்தி தேவரையும், வாயிற் காப்போராம் துவார பாலகரையும் வணங்கிய பின்னரே சிவ பெருமானை வழிபட வேண்டும். பின்னர் வெளி வந்து தட்சிணாமூர்த்தியையும், முருகன், துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் முதலிய தெய்வங்களை வழிபட வேண்டும். பின்னர், சண்டிகேஸ்வரர் சந்நதி சென்று, அவரிடம் " அப்பனையும், அம்மையையும் தரிசித்த பலன் அனைத்தும் கிடைத்திட வேண்டும் " என மனமுருகி கேட்க வேண்டும். ஏனெனில், " எம்மை வழிபட்டோர் உன்னையும் வழிபட்டாலேயே தரிசன பலன் கிடைக்கும் " என சண்டிகேஸ்வரருக்கு சிவ பெருமான் வரம் அளித்துள்ளார். பின்னர் அம்பாளை தரிசித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி இறுதியாக மீண்டும் கோபுர தரிசனம் செய்து வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். ஈஸ்வரனை வணங்கிய பின்னர் நவக்கிரகங்களை வணங்கக் கூடாது. அவ்வாறு வணங்க நேர்ந்தால், மீண்டும் சிவ பெருமனை வணங்கியே வெளியில் செல்ல வேண்டும்.

சிவலிங்க மகிமையும் , பூஜைப் பயன்களும்

சிவாலயங்களில் பரம் பொருளாகிய சிவ பெருமான் பெரும்பாலும் "லிங்க மூர்த்தியாகவே" காட்சி தருகிறார். கயிலாயநாதனை லிங்கமாக வழிபடுவதே சிறப்பு. ஏனெனில், தேவர்களும், முனிவர்களும், அண்டசராசரங்களும் சிவனை லிங்க உருவிலேயே வழிபட்டனர். லிங்கத்தின் பீடம் ஆவுடையார் எனப்படும். அம்பாளின் சொரூபம் பீடத்தில் உள்ளது. லிங்கம் ஞானசக்தி வடிவம். அம்பாள் க்ரியா சக்தியின் வடிவம். லிங்கத்தின் அடிப் பாகம் பிரம்ம பாகம். இது நான்முகனின் சொரூபம். மத்திய பாகம் மஹாவிஷ்ணுவின் சொரூபம். ஆக, லிங்கம் என்பது ருத்ரன், விஷ்ணு மற்றும் நான்முகன் என முமூர்த்திகளையும் உள்ளடக்கியது. ரத்தினத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை வழிபட லஷ்மி கடாட்சம் கிடைக்கும். உலோகங்களால் ஆன லிங்க பூஜை செய்ய தர்மங்கள் தானே தேடி வரும். பவள லிங்க வழிபாடு நிலையான செல்வத்தை கொடுக்கும். மண்ணினாலான சிவ லிங்க தரிசனம் வேண்டிய வரமளிக்கும். கல் கொண்டு செய்யப்பட்ட லிங்க வழிபாடு அரிய சக்திகளை தரும்.

சிவனுக்கு ஏற்ற மலர்களும், கனிகளும்

வில்வ இலைகள் கொண்டு அர்ச்சிப்பது பெருமானின் பரிபூரண அருளைத் தரும். பதவி கிடைக்கும். நாள்தோறும் வில்வ இலைகள் கொண்டு பிரதோஷ காலங்களில் பூஜிப்பவருடன் சிவ பெருமான் எப்பொழுதும் உடனிருப்பார்.வில்வ மரத்தை வணங்குபவர் தெய்வ நிலையை அடைவர். மூன்று இலைகள் கொண்ட அருகம்புல் இலையை சிவனுக்கு சார்த்தினால் பெரும் போகம் பெற்று, நீண்ட நாள் வாழ்ந்து, முக்தி அடைவர். மல்லிகைப்பூ கொண்டு பெருமானை துதிக்கும் பெண்டிர் அழகிய மணவாளனை பெறுவர். வெண் தாமரை வழிபாடு பதிவியைத் தரும். எழுமிச்சை மர இலைகள், காய், பூ இவற்றில் ஒன்றை கொண்டு சிவ பெருமானை, அஷ்டமி, சதுர்த்தி திதிகளிலும், பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற நாட்களிலும் வழிபட, வணங்குபவரது வீட்டில் லஷ்மி காடாட்ஷம் பெருகும். துளசி இலை அல்லது மாலை வழிபாடு ஞானத்தை அருளும்.

பௌர்ணமி சிவ பூஜை பலன்கள்
      தை மாத பூச நட்சத்திரத்தில் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தி அடையும்
      மாசி மாத மக நட்சத்திரத்தில் பஞ்ச வர்ண வஸ்திரம் சார்த்தி வழிபட சிவ தீட்சை கிடைக்கும்
      பங்குனி உத்திரத்தன்று மஞ்சள் வஸ்திரம் கொண்டு சிவனை வணங்க புண்ணியம் வந்தடையும்.
      சித்திரை மாத சித்திரை நட்சத்திர சிவ பெருமான் வழிபாடு குழந்தை பாக்கியத்தை அருளும்
      வைகாசி மாத விசாக நட்சத்திரத்தன்று பரமனை வழிபட்டால் பிறப்பறுத்த கதி கிடைக்கும்
      ஆனி மாத மூல நட்சத்திரத்தன்று சிவனை வழிபட எடுத்த கரியங்களில் வெற்றி கிடைக்கும்
      ஆடி மாத உத்திராட நட்சத்திரத்தில் செய்யும் சிவ பூஜை பாவங்களை தீர்த்து புண்ணியம் அருளும்.
      ஆவணி அவிட்ட நட்சத்திரத்தில் செய்யும் பௌர்ணமி சிவ பூஜை தீராத கடன் தொல்லைகளை தீர்க்கும்.
      சகல சௌபாக்கியத்தையும் அருளும் புரட்டாசி மாத உத்திராட பௌர்ணமி சிவ சக்தி வழிபாடு
      நினைத்த காரியங்களில் வெற்றி பெற ஐப்பசி மாத அசுவினி நட்சத்திரத்தன்று சிவனை வழிபடலாம்.
      ராஜ்ய பரிபாலனம் செய்ய கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர சிவ பூஜை சிறந்தது.
      சகல சௌபாக்கியங்களும் பெற சிவனை மார்கழி மாத திருவாதிரையன்று பௌர்ணமி பூஜை செய்யலாம்..

சிவ லிங்க மகிமைகளும், சிவ பெருமானின் பெருமைகளும், வழிபாட்டு பலன்களும்

 

 

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1