நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
                    நாயன் மார்கள்
 

  நாயனார் திருப்பெயர்

பிறந்த ஊர்: பிறந்த மாதம், நட்சத்திரம்   : முக்தி மாதம், நட்சத்திரம் :

அடியாரின் பெருமைகள்
1
திரு நீலகண்ட நாயனார் பிறந்த ஊர்: சிதம்பரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம்
தன் முதுமை பருவத்தில் இறைவனால் இளமையை திரும்பப் பெற்றவர்
2
இயற்பகை நாயனார் பிறந்த ஊர்: பூம்புகார்
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, உத்திரம்
இறையாக வந்த சிவனிடம் தனது மனைவியை நம்பி அனுப்பியவர்
3
இளையாங்குடி மாற நாயனார் பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, மகம்
தனது வீட்டு கூரையை விறகாக்கி சிவனடியாருக்கு உணவு சமைத்திட்டவர்
4
மெய்ப்பொருள் நாயனார் பிறந்த ஊர்: திருக்கோவிலூர் (விழுப்புரம்)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம்
தன்னை கொன்ற போதும் அடியார் வேடம் பூண்டதால் பகைவனை மன்னித்தவர்
5
விறல்மிண்ட நாயனார் பிறந்த ஊர்: செங்குன்றூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, திருவாதிரை
சிவ பக்தரை வணங்காததால் சுந்தர நாயனாரை கடிந்து பேசியவர்
6
அமர்நீதி நாயனார் பிறந்த ஊர்: பழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, பூரம்
அடியாரக வந்த சிவனது துணிக்காக தனது குடும்பத்தையும், சொத்தையும் கொடுத்தவர்
7
எறிபத்த நாயனார் பிறந்த ஊர்: கரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்தம்
சிவ பூஜைக்கான பூவை எறிந்த காரணத்தால் யானையை கொன்றவர்
8
ஏனாதி நாத நாயனார் பிறந்த ஊர்: எயினனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்
பகைவன் திறுநீறு இட்டிருந்ததால் அவனை கொல்லாமல் உயிர் துறந்தவர்
9
கண்ணப்ப நாயனார் பிறந்த ஊர்: உடுப்பூர்(ஆந்திரா)
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, மிருகசீரிடம்
லிங்கத்திற்காக தனது இரு கண்களையும் தன் கையாலேயே தோண்டி தந்தவர்
10
குங்கிலிய நாயனார் பிறந்த ஊர்: திருக்கடையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆவணி, மூலம்
உணவிற்காக மனைவி கொடுத்த தாலியை விற்று சிவ பூஜைக்கு தூபம் ஏற்றியவர்
11
மானக்கஞ்சாய நாயனார் பிறந்த ஊர் :  கஞ்சாறூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, சுவாதி
மறுநாள் மணம் புரிய இருந்த தன் மகளின் கூந்தலை சிவனடியார் கேட்க வெட்டியவர்
12
அரிவட்டாய நாயனார் பிறந்த ஊர் : கணமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கேட்டை
முக்தி மாதம், நட்சத்திரம் :  தை,திருவாதிரை
சிவ பூஜை பொருட்கள் கீழே விழுந்ததால் தனது கழுத்தை வெட்ட துணிந்தவர்
13
ஆனாய நாயனார் பிறந்த ஊர் : திருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்தம்
இனிய புல்லாங்குழல் இசையினால் சிறந்த தனது சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்
14
மூர்த்தி நாயனார் பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, கார்த்திகை
நாடாளும் பொறுப்பு வந்தும் சடாமுடியுடன் சிவனடியார் வேடத்தில் வாழ்ந்தவர்
15
முருக நாயனார் பிறந்த ஊர் : திருப்புகலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் :  வைகாசி, மூலம்
16
உருத்திர பசுபதி நாயனார் பிறந்த ஊர் : திருத்தலையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அஸ்வினி
கழுத்தளவு நீரில் இரவு பகல் பாராது எந்நேரமும் ருத்ரம் ஓதிய சிவனடியார்
17
திருநாளைபோவார் நாயனார் பிறந்த ஊர் : ஆதனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, ரோகிணி
சிவ தரிசனத்திற்காக நடுவில் இருந்த நந்தியை விலகி இருக்கும்படி செய்தவர்
18
திருக்குறிப்பு தொண்டர் பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, அனுஷம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, சுவாதி
சொன்னபடி சிவனடியாரின் துணியை கொடுக்க இயலாததால் தலையை கல்லில் மோதியவர்
19
சண்டேசுர நாயனார் பிறந்த ஊர் : திருச்சேய்ஞலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, உத்திரம்
தனது சிவ பூஜையை தடுத்திட்ட தனது தந்தையின் காலை வெட்டி எறிந்தவர்
20
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் : திருவாமூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்
தேவாரம் பாடிய சிவனடியார். பற்பல அற்புதங்களை சிவனருளால் நிகழ்த்தியவர்
21
குலச்சிறை நாயனார் பிறந்த ஊர் : மணமேற்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் :கார்த்திகை, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, சித்திரை
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து கொண்டே சைவம் வளர்த்தவர்
22
பெருமிழலை குறும்ப நாயனார் பிறந்த ஊர் : பெருமிழலை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சித்திரை
சுந்தர மூர்த்தி நாயனாருடன் கயிலை மலை சென்ற சிவனடியார்
23
காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர் : காரைக்கால்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி
தடையில்லாது இறைவனை துதிப்பதற்காக பேயுருவை வேண்டி பெற்றவர்
24
அப்பூதி அடிகள் பிறந்த ஊர் : திங்களூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, சதயம்
பாம்பு தீண்டி இறந்த மகனை வைத்து கொண்டு சிவனடியாருக்கு உணவிட்டவர்
25
திருநீலநக்க நாயனார் பிறந்த ஊர் : சாத்தமங்கை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
சிவ லிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் தன் மனைவியை கடிந்தவர்
26
நமி நந்தி நாயனார் பிறந்த ஊர் : எமப்பேரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பூசம்
தண்ணீரை கொண்டு சிவ பூஜையில் விளக்கு ஏற்றியவர்
27
திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் : சீர்காழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
தனது குழந்தைப் பருவத்தில் அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தியவர்
28
ஏயர்கோன் கலிக்காமர் பிறந்த ஊர் : பெருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி
சுந்தரரை கடிந்ததால் சூலை நோய் பெற்று பின் சிவனருளால் குணமானவர்
29
திருமூலர் ிறந்த ஊர் : சாத்தனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அஸ்வினி
திருமந்திரம் எனும் பொக்கிஷத்தை நமக்கு அளித்திட்ட பெருமான்
30
தண்டியடிகள் பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  பங்குனி, சதயம்
கண் பார்வை இழந்தும் சமுதாய நன்மைக்காக குளம் தோண்டியவர்
31
முருக்க நாயனார் பிறந்த ஊர் : திருவேற்காடு
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  வைகாசி, ஆயில்யம்
சூதாடிய வருமானம் கொண்டு சிவ பூஜை செய்திட்ட சிவனடியார்
32
சோமாசி மாற நாயனார் பிறந்த ஊர் : திருஅம்பர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, ஆயில்யம்
சுந்தரரின் நண்பர். நிறைய சிவ பூஜைகளையும், யாகங்களையும் செய்தவர்
33
சாக்கிய நாயனார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, திருவோணம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூராடம்
சிவன் மேல் பேரன்பு கொண்டு லிங்கத்தின் மீது தினம் கல் எறிந்தவர்
34
சிறப்புலி நாயனார் பிறந்த ஊர் : திருஆக்கூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அவிட்டம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, பூராடம்
சிவ பூஜையை அனுதினமும் தவறாது செய்த சிவனடியார்
35
சிறு தொண்ட நாயனார் பிறந்த ஊர் : திருச்செங்காட்டங்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, பரணி
அடியாராய் வந்த சிவன் கேட்டதற்காக தன் மகனையே வெட்டி கறி சமைத்தவர்
36
சேரமான் பெருமாள் பிறந்த ஊர் : திருஅஞ்சைக்களம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி
சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பர். சிவ பூஜையை தவறாது செய்தவர்
37
கணநாத நாயனார் பிறந்த ஊர் : சீகாழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  பங்குனி, திருவாதிரை
சிவ பூஜையை அனுதினமும் அதீத பக்தியுடன் செய்திட்டவர்
38
கூற்றுவ நாயனார் பிறந்த ஊர் : திருக்களந்தை
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, திருவாதிரை
நாடாள வாய்ப்பு கிட்டாது, சிவனை முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்
39
புகழ்ச்சோழ நாயனார் பிறந்த ஊர் : உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, கார்த்திகை
எறிபத்தர் யானையை கொன்றதை அறிந்து தன் உயிர் விட துணிந்தவர்
40
நரசிங்க முனையரையர்  பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் :  புரட்டாசி, சதயம்
சுந்தர மூர்த்தி நாயனாரை வளர்த்திட்ட சிவனடியார்
41
அதிபத்த நாயனார் பிறந்த ஊர் : நாகை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆவணி, ஆயில்யம்
வலையில் பொன் மீன் கிடைக்க, வழக்கத்தை மாற்றாது ஆற்றில் விட்டவர்
42
கலிக்கம்ப நாயனார் பிறந்த ஊர் : பெண்ணாகடம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  தை, ரேவதி
அடியாராய் வந்த வேலையாளை உபசரிக்காத மனைவியின் கையை வெட்டியவர்
43
கலிய நாயனார் பிறந்த ஊர் : திருவொற்றியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை
வறுமையில் தன் மனைவியையே விற்று சிவ பூஜையில் விளக்கேற்றியவர்
44
சத்தி நாயனார் பிறந்த ஊர் : வரிஞ்சையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பூசம்
சிவனை பற்றி தவறாக பேசியவரது நாக்கை அறுத்தவர்
45
ஐயடிகள் காடவர்கோன் பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்
அரச பதவியை துறந்து திருத்தல யாத்திரையை மேற்கொண்டவர்
46
கணம்புல்ல நாயனார் பிறந்த ஊர் : இருக்குவேளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை
தனது தலை முடியை கொண்டு சிவ பூஜையில் விளக்கு ஏற்றியவர்
47
காரி நாயனார் பிறந்த ஊர் : திருக்கடவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மாசி, பூராடம்
காரிக்கோவை என்ற நூல் மூலம் வந்த வருமானத்தில் சிவாலயங்கள் அமைத்தவர்
48
நின்றசீர் நெடுமாறனார் பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பரணி
சம்பந்தரால் தனது கூன் நோய் நீங்க பெற்று சைவம் வளர்த்திட்ட அரசன்
49
வாயிலார் நாயனார் பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, ரேவதி
மனத்தால் சிவ பெருமானுக்கு கோயில் அமைத்து வழிபட்ட சிவனடியார்
50
முனையடுவார் நாயனார் பிறந்த ஊர் : நீடூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்
போர் தொழில் புரிந்து தன் வருமானத்தில் அனைவருக்கும் உணவளித்தவர்
51
கழற்சிங்க நாயனார்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி
சிவ பூஜைக்கான மலரை முகர்ந்து பார்த்த மனைவியின் கையை வெட்டியவர்
52
இடங்கழி நாயனார்
பிறந்த ஊர் : கொடும்பாளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, கார்த்திகை
அரசனாயினும் தனது நெற் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரி வழங்கியவர்
53
செருத்துணை நாயனார் பிறந்த ஊர் : கீழைத்தஞ்சை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி
சிவ பூஜை மலரை முகர்ந்த கழற்சிங்கர் மனைவியின் மூக்கை வெட்டியவர்
54
புகழ்த்துணை நாயனார் பிறந்த ஊர் : செருவிலிபுத்தூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, ஆயில்யம்
வறுமை வாட்டியாலும் சிவ பூஜையை தவறாது செய்த சிவனடியார்
55
கோட்புலி நாயனார்
பிறந்த ஊர் :நாட்டியத்தான்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை
சிவ பூஜைக்கான நெல்லை எடுத்த உறவினரது நெல்லை அழித்தவர்
56
பூசலார் நாயனார் பிறந்த ஊர் : திருநின்றவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, பூரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அனுஷம்
பொருள் இல்லாது மனக் கோயில் கட்டி இறைவனை அதில் குடியேறச்செய்தவர்
57
மங்கயர்க்கரசியார் பிறந்த ஊர் : பாழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரோகிணி
சைவ சமயம் வளர்த்த பாண்டிய மகாராணி
58
நேச நாயனார்  பிறந்த ஊர் : காம்பீலி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி
எந்நேரமும் சிவ நாமத்தை எண்ணியவர்
59
கோச்செங்கட் சோழன் பிறந்த ஊர் :உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, மிருகசீரிடம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மாசி, சதயம்
முற்பிறவியின் பயனால் 70 மணிமாட கோயிகள் கட்டியவர்
60
திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊர் : எருக்கத்தம்புலியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்
சம்பந்தருடன் இணைந்து யாழ் இசையால் சிவ புகழ் பாடியவர்
61
சடைய நாயனார் பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை
சுந்தர மூர்த்தி நாயனாரின் தந்தை
62
இசை ஞானியார் பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை
சுந்தர மூர்த்தி நாயனாரின் தாய்
63
சுந்தர மூர்த்தி நாயனார்

பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி
தேவாரம் பாடிய, எம்பிரான் தோழன் என்றழைக்கப்பட்டவர்
 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1