நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
திருப்பரங்குன்றம்   திருச்செந்தூர்  பழனி   சுவாமிமலை  திருத்தணி  பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகள்

சுப்பிரமணிய சுவாமியாய் அருள் புரியும் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம்

மதுரை மாநரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மலைக்கோவிலான இத் திருத்தலம். சிவலிங்க வடிவில் அமைந்துள்ள இக் குறுமலை சுமார் 200 மீ. உயரமுடையது. பரன் என்றால் சிவன். குன்று என்பது சிறு மலையை குறிக்கும். சிவலிங்கத்தை போல் காட்சியளிப்பதால் இது "பரன் குன்று" எனவும் பின்னர் சிறப்பினை குறிக்கும் வகையில் திரு என சேர்த்து " திருப்பரங்குன்றம்" என்றும் அழைக்கப்பட்டது. குன்றின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குமரன் திருக்கோயில். கோபுர வாயிலுக்கு முன் உள்ளது ஆத்தான மண்டபம். சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் அழைக்கப்படும் இந்த மண்டபம் அறுபத்தாறு தூண்கள் கொண்டு மிகப் பெரியதாய் காட்சி தருகின்றது. தூண்களில் யாழி, சிவனாரது திருக்கோலம், குதிரைகள் போன்ற பல கலை நயமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம் மண்டபத்தை அடுத்து ஏழு நிலைகளை கொண்ட ராஜ கோபுரமும், கல்யாண மண்டபமும் காட்சியளிக்கின்றது. அடுத்து காணப்படும் மகா மண்டபத்திலிருந்து சடாட்சர படிகளாக விளங்கும் ஆறு படிகளை கடந்து சென்றால், மலையை குடைந்து உருவாக்கப்பட்ட கர்ப்பகிரகத்தை கொண்டுள்ள அர்த்த மண்டபத்தை அடையலாம். 
 

அர்த்த மண்டபத்தின் கிழக்கே உள்ள குகை கோயிலில் அன்னபூரணி தன் பரிவாரங்களுடன் காட்சியருள்கின்றாள். தல நாயகனின் திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்ததை கூறும் வகையில், இங்கு முருகப் பெருமான் திருமணக் கோலத்தில் அனைத்து தெய்வங்கள் புடை சூழ காட்சிதருகின்றார். குன்றின் அடிப்பாகத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது முருகனின் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு உருவக்கப்பட்டது என்பது ஐதீகம். இந்த பொய்கையை கண்டாளும், தீர்த்த நீராடினாலும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறிடும்.
 
மூலவர் சுப்பிரமணிய சுவாமி
உற்சவர் சண்முகர்,
அம்மன்/தாயார்  
தல விருட்சம் கல்லத்தி
தீர்த்தம் லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் தென்பரங்குன்றம்
ஊர் திருப்பரங்குன்றம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

 

பாடியவர்கள்:

நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.

திருப்புகழ்

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொளவிழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுணவிரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா -

மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய  கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே;

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே -

தெனத்தெனந்தன எனவரி யளிநறைதெவிட்ட அன்பொடு பருகுயபொழில்திகழ் திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

-அருணகிரிநாதர்

 

 

மேலும் அறிந்து கொள்ள

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1