நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
திருப்பரங்குன்றம்   திருச்செந்தூர்  பழனி   சுவாமிமலை  திருத்தணி  பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகள்

தந்தைக்கே பாடம் சொன்ன சுவாமிநாதனாய் அருள் புரியும் சுவாமிமலை

"திருவேரகம்","குருமலை","தாதரீகிரி", "சுந்தராசலம்" என்றெல்லாம் வணங்கப்படும் சுவாமிமலை முருகப் பெருமானது அறுபடை வீடுகளில் நான்கவதாக வழிபடப்படுகின்றது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவேரகம் என்றால் அழகும், எழுச்சியும் உள்ள திருத்தலம் என்பது பொருள். தகப்பனுக்கே குருவானதால் குருமலை. பிரணவம் உரைக்கும் பொழுது சிவனாருக்கே சுவாமியாய் அமர்ந்து பாடம் சொன்னதால் இத் திருத்தலம் "சுவாமிமலை என்றும், மலை மேல் கோவில் கொண்டுள்ள இத் தல முருகன் "தகப்பன் சுவாமி", "குருநாதன்", "சுவாமிநாதன்" என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.

திருக்கோயில் 60 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. மலையின் கீழ் சிவபெருமானும், அம்மையும் கோயில் கொள்ள, மலை மேலே குமரன் கோயில் கொண்டுள்ளான். இத் திருக்கோயில் மூன்று பிரகாரங்கள், மூன்று வாயில்கள் மற்றும் ஐந்து நிலைகளை கொண்டதாக திகழ்கின்றது. முதல் பிரகாரம் மலையின் அடியிலும், இரண்டாம் பிரகாரம் மலையின் நடுவிலும், மூன்றாம் பிரகாரம் மலை மேலும் அமைந்துள்ளது.

முதல் பிரகாரத்தில் இருந்து இரண்டாம் பிரகரத்திற்கு 28 படிகள், பின்னர் அங்கிருந்து மூன்றாம் பிரகாரத்திற்கு 32 படிகள் என மொத்தமாக 60 படிகள் உள்ளன. இவை அனைத்தும் அறுபது தமிழ் ஆண்டுகளை குறிக்கும். வடக்கு பிரகாரத்தில் உள்ள "வஜ்ர தீர்த்தம்" சிவனது சூலாயுதத்தால் உண்டாக்கப்பட்டது. இத் தீர்த்தம்தான் சுவாமிநாதனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது. குழந்தை செல்வம் வேண்டுபவர்களும், நீண்ட நாட்கள் நோய்களால் துன்புற்றிருப்போரும் இங்கு நீராட நலமைகின்றனர். ஒரு சமயம் முருகப் பெருமான் பிரம்ம தேவரிடம் பிரணவ மந்திரத்தையும், நான்கு வேதங்களையும் வரிசைப்படி கூறச் சொல்ல, பிரணவத்தின் பொருள் தெரியாது பிரம்மன் திகைத்து நின்றார். கந்தனால் சிறை வைக்கப்பட்டார். படைப்புத் தொழில் தடைபட்டது.

தேவர்கள் பரமனை வேண்ட, பரமன் கந்தனிடம் பிரம்ம்னை விடுவிக்க சொன்னார். பின்னர் கந்தனிடம் " பிரணவத்தின் பொருள் உனக்கு தெரியமா?" எனக் கேட்க, அதற்கு முருகன், "மாசி மகம் தீட்சைக்கு சிறந்த நாளாகும், அன்று பொருளுரைப்பேன்" எனக் கூறினான். மாசி மகம் வரை தனது தமையனை குருவாகக் கொண்டு பரமன் பணிவிடைகள் செய்தார். மகத்தன்று, தனது மடியில் கந்தனை அமரச் செய்து, தன் சிரம் தாழ்த்தி, வாய் பொத்தி, கந்தனிடம் பிரணவத்தின் பொருள் அறிந்தார். அப்பனுக்கே பாடம் சொன்ன முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள இத் தலம் திருமண வைபவங்களுக்கு பெயர் பெற்றது.    
திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்
மூலவர் சுவாமிநாதர், சுப்பையா
உற்சவர் வள்ளி, தெய்வானை
அம்மன்/தாயார்  
தல விருட்சம் நெல்லி மரம்
தீர்த்தம் வஜ்ர தீர்த்தம்,குமாரதாரை,சரவண தீர்த்தம், நேத்திர குளம்,பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் திருவேரகம்
ஊர் சுவாமிமலை
மாவட்டம் தஞ்சாவூர்  
மாநிலம் தமிழ்நாடு
   

 

பாடியவர்கள்:

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம தூங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா;
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி எந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையருள் இளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்

அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே.
 

-அருணகிரிநாதர்

 

மேலும் அறிந்து கொள்ள

 

 

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1