நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
திருப்பரங்குன்றம்   திருச்செந்தூர்  பழனி   சுவாமிமலை  திருத்தணி  பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகள்

பாலசுப்பிரமணிய சுவாமியாய் குமரன் அருளும் ஐந்தாம் படை வீடு திருத்தணி

 
திருத்தணிகை நகரின் மத்தியில் சுமார் 120 மீ. உயரத்தில் அமைந்துள்ளது முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி. திருக்கோயில் நான்கு பிரகாரங்களை கொண்டது. மலை அடிவாரத்தில் பிரம்ம சுனை காணப்படுகிண்டறது. அருகில் பிரம்ம தீர்த்தமும், விநாயகர் மற்றும் பிரம்ம லிங்க சந்நதிகளும் உள்ளன. இங்கு பிரம்ம தேவர் தனது படைப்புத் தொழிலை முருகன் அருள் பெற்று மீண்டும் துவங்கியதாக ஐதீகம். மலை உச்சியில் உள்ள நான்காவது பிரகாரத்தில் இந்திர நீல சுனையும், விஷ்ணு, நாக தீர்த்த்ங்களும் காணப்படுகின்றன. இங்கிருந்து கிழக்கு வாயில் வழியே சில படிகள் மேலேறிச் சென்றால் மூன்றாவது பிரகாரத்தையும் பின்னர் பின்னர் இரண்டாம் பிரகாரத்தையும் சென்றடையலாம். பஞ்சாட்சர படிகள் எனும் ஐந்து படிகள் மேலேறி சென்றால், கர்ப்பகிரகத்தை சுற்றி செல்லும் முதற் பிரகாரத்தை வந்தடையலாம். இங்கு தணிகைப் பெருமானாய் முருகப் பெருமான், தன் இடக் கையை தொடையில் வைத்தும், வலக் கையில் வேல் தாங்கியும் சுந்தர வடிவேலனாய் தனித்து நின்று அருள்பாளிக்கின்றான். இத் திரு உருவம் ஆறுமுகனின் 16 வகையான திருவுருவில் "ஞானசக்திதரர்" எனும் திரு உருவாகும்.
மலை மீது ஏறிச் செல்லும் வழியில் உள்ள பிரம்ம சுனையில் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று தீர்த்த நீராடி, பிரம்ம லிங்கத்தையும், முருகனையும் வழிபட்டால் தீராத நோய்களும், சகல விதமான தோஷங்களும் அகன்றிடும். பங்குனி உத்திரமும், ஞாயிற்று கிழமையும் கூடிய நாளில் இங்குள்ள விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி குமரனை வணங்க நோய்கள் நீங்கும். செல்வம், புகழ், வலிமை அனைத்தும் வந்தடையும். சிவ பூஜை செய்யும் பொருட்டு கங்கையையே குமரன் இங்கு கொண்டு வந்ததாக கருதப்படும் சரவணப் பொய்கையில் நீராட நலம் பல விளைந்திடும்.

 

 

 

மூலவர் சுப்பிரமணிய சுவாமி
உற்சவர் சண்முகர்,
அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மகுடமரம்
தீர்த்தம் இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்
ஆகமம்/பூஜை குமார தந்திரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் சிறுதணி
ஊர் திருத்தணி
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

 

பாடியவர்கள்:

அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளார்.இது தவிர ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார்.

 

 திருப்புகழ்

 

வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன் விட்டகணை பட்ட விசையாலே -

வெட்ட வெளி யிற்றெருவில் வட்ட பணை யிற்கனல்விரித்தொளி பரப்பு மதியாலே;
 

பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசைபட்டதிகி ரிக்கு மழியாதே -

பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர் பச்சைமயி லுற்று வரவேணும்;

நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நினைக்குமன மொத்த

நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற நித்தமிறு கத்த ழுவுமார்பா -

எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில் எப்பொழுது நிற்கு முருகோனே -

எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரரிட்டசிறை விட்ட பெருமாளே.


-அருணகிரிநாதர்

 

 

 

மேலும் அறிந்து கொள்ள

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1