நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
திருப்பரங்குன்றம்   திருச்செந்தூர்  பழனி   சுவாமிமலை  திருத்தணி  பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகள்

சோலைமலை முருகனாய் அருள் புரியும் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச் சோலை என்றழைக்கபடும் இந்த படை வீடு " அழகர் கோயில் ' என்றும் வணங்கப்படுகின்றது. வேறு எந்த ஒரு படை வீட்டிலும் இல்லாதவாறு இக் கோயிலில் மலை மீது முருகனும், மலை அடிவாரத்தில் திருமாலும் கோயில் கொண்டுள்ளனர். முருகப் பெருமானை தரிசனம் செய்யும் முன் திருமாலை சேவித்தே செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில், பொன்னால் வேயப்பட்ட விமானத்தின் கீழ் சுந்தரராஜ பெருமாளாய், தன் திருக்கரத்தில் சக்கரப்படை தாங்கி திருச்சேவை சார்த்துகின்றார் எம் பெருமான்.

தாயாருக்கும், ஆண்டாளுக்கும், யோக நரசிம்மருக்கும், தனியே சந்நதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் வலம்புரி விநாயகரும், விஸ்வேஸ்வனரும் அருள் பாளிக்கின்றனர். மலை மீது அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கோயில் கொண்டுள்ளான் கந்தன். அவ்வை பிராட்டியிடம் மாடு மேய்க்கும் சிறுவனாய் வந்து " சுட்ட பழம் வேண்டும? சுடாத பழம் வேண்டுமா? " எனக் கேட்டு,மெய்ஞானத்தினால் மட்டுமே இறைவனை அடைய முடியும் எனும் பெருந்தத்துவத்தை, உலகுக்கு முருகன் உணர்த்திய திருத்தலம் இது.

அவ்வைக்கு நாவல் பழம் உதிர்த்து கொடுத்ததால், பழமுதிர்ச்சோலையான இங்கு கருணை வடிவாய் காட்சி தரும் முருகனை வழிபட ஞானமும், கல்வியும் சிறக்கப் பெறலாம் என்பது நிச்சயம். இத் தல நூபுர கங்கை தீர்த்தம் பலவிதமான நோய்களை தீர்க்க வல்லது.
 
 
மூலவர் தம்பதியருடன் முருகன்
உற்சவர் -
அம்மன்/தாயார்  
தல விருட்சம் நாவல் மரம்
தீர்த்தம் நூபுர கங்கை
ஆகமம்/பூஜை சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் சோலைமலை
ஊர் சோலைமலை
மாவட்டம் மதுரை 
மாநிலம் தமிழ்நாடு
 
 

 

பாடியவர்கள்:

அருணகிரிநாதர்

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -

அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;
இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே - இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்
மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

-அருணகிரிநாதர்

 

 

 

 

மேலும் அறிந்து கொள்ள

 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1