நவக்கிரக

கோவில்கள்

அறுபடை

கோவில்கள்

108 திவ்யதேசம

 

கோவில்கள்

இந்துமத

 

பெருமைகள்

 
Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam
திருப்பரங்குன்றம்   திருச்செந்தூர்  பழனி   சுவாமிமலை  திருத்தணி  பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகள்

சுப்பிரமணிய சுவாமியாய் அருள் புரியும் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம்

மதுரை மாநரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மலைக்கோவிலான இத் திருத்தலம். சிவலிங்க வடிவில் அமைந்துள்ள இக் குறுமலை சுமார் 200 மீ. உயரமுடையது. பரன் என்றால் சிவன். குன்று என்பது சிறு மலையை குறிக்கும். சிவலிங்கத்தை போல் காட்சியளிப்பதால் இது "பரன் குன்று" எனவும் பின்னர் சிறப்பினை குறிக்கும் வகையில் திரு என சேர்த்து " திருப்பரங்குன்றம்" என்றும் அழைக்கப்பட்டது. குன்றின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குமரன் திருக்கோயில். கோபுர வாயிலுக்கு முன் உள்ளது ஆத்தான மண்டபம். சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் அழைக்கப்படும் இந்த மண்டபம் அறுபத்தாறு தூண்கள் கொண்டு மிகப் பெரியதாய் காட்சி தருகின்றது. தூண்களில் யாழி, சிவனாரது திருக்கோலம், குதிரைகள் போன்ற பல கலை நயமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம் மண்டபத்தை அடுத்து ஏழு நிலைகளை கொண்ட ராஜ கோபுரமும், கல்யாண மண்டபமும் காட்சியளிக்கின்றது. அடுத்து காணப்படும் மகா மண்டபத்திலிருந்து சடாட்சர படிகளாக விளங்கும் ஆறு படிகளை கடந்து சென்றால், மலையை குடைந்து உருவாக்கப்பட்ட கர்ப்பகிரகத்தை கொண்டுள்ள அர்த்த மண்டபத்தை அடையலாம்.  திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்
 

அர்த்த மண்டபத்தின் கிழக்கே உள்ள குகை கோயிலில் அன்னபூரணி தன் பரிவாரங்களுடன் காட்சியருள்கின்றாள். தல நாயகனின் திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்ததை கூறும் வகையில், இங்கு முருகப் பெருமான் திருமணக் கோலத்தில் அனைத்து தெய்வங்கள் புடை சூழ காட்சிதருகின்றார். குன்றின் அடிப்பாகத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது முருகனின் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு உருவக்கப்பட்டது என்பது ஐதீகம். இந்த பொய்கையை கண்டாளும், தீர்த்த நீராடினாலும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறிடும்.
 
இரண்டாம் படை வீடாகத் திகழும் கடற்கரை கோவிலான திருச்செந்தூர்
 
திருமுருகாற்றுப்படையிலும், சிலப்பதிகாரத்திலும், கந்த புராணத்திலும், திருச்செந்தூர் பிள்ளை தமிழிலும் போற்றிப் பாடப்பெற்ற கடற்கரை திருக்கோயிலான இத் திருத்தலம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. வழிபடுவோருக்கு வெற்றிகளையும், செல்வ வளத்தையும் அருளும் திருக்கோயில் இது. கடல் அலைகள் ஓயாது தாலாட்டிக்கொண்டிருக்கும் இத் திருக்கோயில் மூன்று சுற்றுகளையும், ஒன்பது நிலைகளையும் கொண்டு ராஜ கோபுரத்துடம் மிகப் பிரம்மாண்டமாய் காட்சி தருகின்றது.

மகான் ஆதி சங்கரரை காச நோய் வாட்ட, சிவ பெருமான் " செந்திலம்பதி சென்று குமரனை வேண்டுவாய் " என உணர்த்த இத் தலம் வந்த சங்கரர் " சுப்ரமண்ய புஜங்கம் " என்ற பாமாலையை பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். கடும் வயிற்று வலியால் அவதியுற்ற வியாழ பகவான், இத் தலம் வந்து கந்தனை வணங்கி இலைப் பிரசாதத்தை தன் நெற்றியில் அணிய நோய் நீங்கப் பெற்றார். இத் தல நாயகனை வணங்க வினைகள் அனைத்தும் தீரும். ஐந்து வயது வரை பேசாது இருந்த குழந்தை குமரகுருபர சுவாமிகளை " கந்தர் கலி வெண்பா " என்ற பாமாலை பாட வைத்த திருத் தலம் இது.
திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்
முருகப் பெருமான் சூர பத்மனை அழிக்க படை எடுத்து வரும் பொழுது எதிர்ப்பட்ட தாரகாசுரனை அழித்து இத் தலம் வந்து தங்கினார். தேவ ஸ்தபதி விசுவகர்மாவால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் எழுந்தருளி தேவ குருவான வியாழனால் பூஜிக்கப்பட்டு அசுரர் தம் வரலாற்றை அறிந்தார். வியாழனால் பூஜிக்கப் பெற்றதால் இத் தலம் வியாழ ஷேத்திரமாகவும் விளங்குகின்றது. பின்னர் சூரனின் மீது படை எடுத்து அவனை அழித்திட்டார். இதனால் இத் தலம் வெற்றி மாநகர் எனப் பொருள் கொண்ட "செயந்திபுரம்" என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே "செந்தூர்" என மருவி "திருசெந்தூர்" என்றானது.
திருஆவினன்குடி என்றழைக்கப்படும் மூன்றாம் படைவீடான பழனி மலை
முருகப் பெருமான் தண்டாயுதபாணியாய் அருள் புரியும் பழனி மலை அவனது மூன்றாம் படை வீடு. மலை மேல் செல்ல இழுவை ரயில், யானையடிப் பாதை மற்றும் படிகள் என மூன்று வழி உண்டு. மலை அடிவாரத்தில் பாத விநாயகர் சந்நதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நதியும் அமைந்துள்ளன. பாத விநாயகரை அடுத்து காளத்திநாதரும், அறுபத்து மூவரில் ஒருவரான கண்ணப்ப நாயனாரும் தனி சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள தேவசேனாபதி திருமணம், சூர சம்கார சுப்பிரமணியர், வீரபாகு தேவர் போன்ற சிற்பங்கள் கலைநயமிக்கதாய் காணப்படுகின்றன. படி வழிப் பாதையில் மயில் மண்டபம் துவங்கி இடையில் பல மண்டபங்கள் மலை மீது செல்வோர் இளைப்பாற கட்டப்பட்டுள்ளன.


வழியில் வள்ளி, இடும்பன், விநாயகர் போன்றோரின் சந்நதிகளும் காணப்படுகின்றன. யானையடிப் பாதையில் சென்றால் இத் திருத்தல வரலாற்றை விளக்கும் பல்வேறு சிற்பங்கள் காண்போர் வியக்கும் வண்ணம் அழகுடன் வடிமைக்கப்பட்டுள்ளன. வள்ளியம்மன் சுனை என்ற எந்நாளும் வற்றாத சுனை ஒன்றும் உள்ளது. 697 படியகள் மேலேறி சென்றால் ஞான தண்டாயுத பெருமானின் கோவிலை காணலாம். 
திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்
இத் திருக்கோயில் இரண்டு பிரகாரங்களையும், ஐந்து நிலைகளையும் கொண்டு ராஜ கோபுரத்துடன் பெருங்கோயிலாய் திகழ்கின்றது. மலைப் பாதை சென்றடைவது இரண்டாம் பிரகாரம். இதில் இருந்து கோவிலுக்குள் செல்லும் வழியில் அழகிய வேலைப்பாடுகளை கொண்டிருக்கும் மணிக்கட்டு மண்டபம் காணப்படுகின்றது. அருகில் வல்லப கணபதி சந்நதியும், அக்கினி குண்டமும், கொடிமரமும் உள்ளன. அடுத்து காணப்படுவது நாயக்கர் மண்டபம். இங்கு விநாயகர், சுப்பிரமணியர், நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் தனி சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். ராஜ கோபுர வாயிலை கடந்தவுடன் உள்ளது பாரவேல் மண்டபமும், நவக்கிரக மண்டபமும். அடுத்து உள்ளது கர்ப்பகிரகம். இங்கு சரவணப் பொய்கையும், சண்முக நதியும் புண்ணிய தீர்த்தங்கள்.
தந்தைக்கே பாடம் சொன்ன சுவாமிநாதனாய் அருள் புரியும் சுவாமிமலை

"திருவேரகம்","குருமலை","தாதரீகிரி", "சுந்தராசலம்" என்றெல்லாம் வணங்கப்படும் சுவாமிமலை முருகப் பெருமானது அறுபடை வீடுகளில் நான்கவதாக வழிபடப்படுகின்றது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவேரகம் என்றால் அழகும், எழுச்சியும் உள்ள திருத்தலம் என்பது பொருள். தகப்பனுக்கே குருவானதால் குருமலை. பிரணவம் உரைக்கும் பொழுது சிவனாருக்கே சுவாமியாய் அமர்ந்து பாடம் சொன்னதால் இத் திருத்தலம் "சுவாமிமலை என்றும், மலை மேல் கோவில் கொண்டுள்ள இத் தல முருகன் "தகப்பன் சுவாமி", "குருநாதன்", "சுவாமிநாதன்" என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.

திருக்கோயில் 60 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. மலையின் கீழ் சிவபெருமானும், அம்மையும் கோயில் கொள்ள, மலை மேலே குமரன் கோயில் கொண்டுள்ளான். இத் திருக்கோயில் மூன்று பிரகாரங்கள், மூன்று வாயில்கள் மற்றும் ஐந்து நிலைகளை கொண்டதாக திகழ்கின்றது. முதல் பிரகாரம் மலையின் அடியிலும், இரண்டாம் பிரகாரம் மலையின் நடுவிலும், மூன்றாம் பிரகாரம் மலை மேலும் அமைந்துள்ளது.
திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்

முதல் பிரகாரத்தில் இருந்து இரண்டாம் பிரகரத்திற்கு 28 படிகள், பின்னர் அங்கிருந்து மூன்றாம் பிரகாரத்திற்கு 32 படிகள் என மொத்தமாக 60 படிகள் உள்ளன. இவை அனைத்தும் அறுபது தமிழ் ஆண்டுகளை குறிக்கும். வடக்கு பிரகாரத்தில் உள்ள "வஜ்ர தீர்த்தம்" சிவனது சூலாயுதத்தால் உண்டாக்கப்பட்டது. இத் தீர்த்தம்தான் சுவாமிநாதனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது. குழந்தை செல்வம் வேண்டுபவர்களும், நீண்ட நாட்கள் நோய்களால் துன்புற்றிருப்போரும் இங்கு நீராட நலமைகின்றனர். ஒரு சமயம் முருகப் பெருமான் பிரம்ம தேவரிடம் பிரணவ மந்திரத்தையும், நான்கு வேதங்களையும் வரிசைப்படி கூறச் சொல்ல, பிரணவத்தின் பொருள் தெரியாது பிரம்மன் திகைத்து நின்றார். கந்தனால் சிறை வைக்கப்பட்டார். படைப்புத் தொழில் தடைபட்டது.

தேவர்கள் பரமனை வேண்ட, பரமன் கந்தனிடம் பிரம்ம்னை விடுவிக்க சொன்னார். பின்னர் கந்தனிடம் " பிரணவத்தின் பொருள் உனக்கு தெரியமா?" எனக் கேட்க, அதற்கு முருகன், "மாசி மகம் தீட்சைக்கு சிறந்த நாளாகும், அன்று பொருளுரைப்பேன்" எனக் கூறினான். மாசி மகம் வரை தனது தமையனை குருவாகக் கொண்டு பரமன் பணிவிடைகள் செய்தார். மகத்தன்று, தனது மடியில் கந்தனை அமரச் செய்து, தன் சிரம் தாழ்த்தி, வாய் பொத்தி, கந்தனிடம் பிரணவத்தின் பொருள் அறிந்தார். அப்பனுக்கே பாடம் சொன்ன முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள இத் தலம் திருமண வைபவங்களுக்கு பெயர் பெற்றது.   
 திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்
பாலசுப்பிரமணிய சுவாமியாய் குமரன் அருளும் ஐந்தாம் படை வீடு திருத்தணி
 
திருத்தணிகை நகரின் மத்தியில் சுமார் 120 மீ. உயரத்தில் அமைந்துள்ளது முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி. திருக்கோயில் நான்கு பிரகாரங்களை கொண்டது. மலை அடிவாரத்தில் பிரம்ம சுனை காணப்படுகிண்டறது. அருகில் பிரம்ம தீர்த்தமும், விநாயகர் மற்றும் பிரம்ம லிங்க சந்நதிகளும் உள்ளன. இங்கு பிரம்ம தேவர் தனது படைப்புத் தொழிலை முருகன் அருள் பெற்று மீண்டும் துவங்கியதாக ஐதீகம். மலை உச்சியில் உள்ள நான்காவது பிரகாரத்தில் இந்திர நீல சுனையும், விஷ்ணு, நாக தீர்த்த்ங்களும் காணப்படுகின்றன. இங்கிருந்து கிழக்கு வாயில் வழியே சில படிகள் மேலேறிச் சென்றால் மூன்றாவது பிரகாரத்தையும் பின்னர் பின்னர் இரண்டாம் பிரகாரத்தையும் சென்றடையலாம். பஞ்சாட்சர படிகள் எனும் ஐந்து படிகள் மேலேறி சென்றால், கர்ப்பகிரகத்தை சுற்றி செல்லும் முதற் பிரகாரத்தை வந்தடையலாம். இங்கு தணிகைப் பெருமானாய் முருகப் பெருமான், தன் இடக் கையை தொடையில் வைத்தும், வலக் கையில் வேல் தாங்கியும் சுந்தர வடிவேலனாய் தனித்து நின்று அருள்பாளிக்கின்றான். இத் திரு உருவம் ஆறுமுகனின் 16 வகையான திருவுருவில் "ஞானசக்திதரர்" எனும் திரு உருவாகும். திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்
மலை மீது ஏறிச் செல்லும் வழியில் உள்ள பிரம்ம சுனையில் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று தீர்த்த நீராடி, பிரம்ம லிங்கத்தையும், முருகனையும் வழிபட்டால் தீராத நோய்களும், சகல விதமான தோஷங்களும் அகன்றிடும். பங்குனி உத்திரமும், ஞாயிற்று கிழமையும் கூடிய நாளில் இங்குள்ள விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி குமரனை வணங்க நோய்கள் நீங்கும். செல்வம், புகழ், வலிமை அனைத்தும் வந்தடையும். சிவ பூஜை செய்யும் பொருட்டு கங்கையையே குமரன் இங்கு கொண்டு வந்ததாக கருதப்படும் சரவணப் பொய்கையில் நீராட நலம் பல விளைந்திடும்.
சோலைமலை முருகனாய் அருள் புரியும் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச் சோலை என்றழைக்கபடும் இந்த படை வீடு " அழகர் கோயில் ' என்றும் வணங்கப்படுகின்றது. வேறு எந்த ஒரு படை வீட்டிலும் இல்லாதவாறு இக் கோயிலில் மலை மீது முருகனும், மலை அடிவாரத்தில் திருமாலும் கோயில் கொண்டுள்ளனர். முருகப் பெருமானை தரிசனம் செய்யும் முன் திருமாலை சேவித்தே செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில், பொன்னால் வேயப்பட்ட விமானத்தின் கீழ் சுந்தரராஜ பெருமாளாய், தன் திருக்கரத்தில் சக்கரப்படை தாங்கி திருச்சேவை சார்த்துகின்றார் எம் பெருமான்.

தாயாருக்கும், ஆண்டாளுக்கும், யோக நரசிம்மருக்கும், தனியே சந்நதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் வலம்புரி விநாயகரும், விஸ்வேஸ்வனரும் அருள் பாளிக்கின்றனர். மலை மீது அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கோயில் கொண்டுள்ளான் கந்தன். அவ்வை பிராட்டியிடம் மாடு மேய்க்கும் சிறுவனாய் வந்து " சுட்ட பழம் வேண்டும? சுடாத பழம் வேண்டுமா? " எனக் கேட்டு,மெய்ஞானத்தினால் மட்டுமே இறைவனை அடைய முடியும் எனும் பெருந்தத்துவத்தை, உலகுக்கு முருகன் உணர்த்திய திருத்தலம் இத
ு.திருக்கோயில் தல வரலாறு படங்களுடன்

அவ்வைக்கு நாவல் பழம் உதிர்த்து கொடுத்ததால், பழமுதிர்ச்சோலையான இங்கு கருணை வடிவாய் காட்சி தரும் முருகனை வழிபட ஞானமும், கல்வியும் சிறக்கப் பெறலாம் என்பது நிச்சயம். இத் தல நூபுர கங்கை தீர்த்தம் பலவிதமான நோய்களை தீர்க்க வல்லது.
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathuyellowpages.com
New Page 1